Naga Chaitanya Sobhita Wedding:நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண கொண்டாட்டம்!புகைப்பட தொகுப்பு!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண கொண்டாட்டம் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாரம்பரிய முறைப்படி பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவீட்டார் குடும்பத்தினரும் பங்கேற்று கோலாகலமாக திருமணச் சடங்குகளை நடத்தினர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.
ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் புதன்கிழமை (டிசம்பர் 4ஆம் தேதி) இரவு 8 மணிக்கு முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்னபூரணா ஸ்டுடியோ வளாகத்தில் திருமண நிகழ்ச்சி என்ற தகவலும் வெளியானது. இரு வீட்டாரும் கொண்டாடத்திற்கு தயாராகிவிட்டனர்.
ந்த திருமண நிகழ்வில், ஏராளமான தெலுங்கு திரைத்துறை நட்சத்திரங்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு 8 மணிக்கு, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி, பிரபாஸ், ராஜமவுலி, ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, ராம்சரண், நயன்தாரா, மகேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். முன்னதாக ஹல்தி நிகழ்வு நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -