Prabhas : பாகுபலிக்கு பின் தொடர் தோல்வியை சந்திக்கும் பிரபாஸ்.. கைக்கொடுக்குமா பிரசாந்த் நீலின் சலார்?
ராஜமெளலியின் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானவர் பிரபாஸ். முதல் பாகத்தில் எழும்பிய கேள்விகளுக்கும் குழப்பங்களும் பதிலளிக்கும் வகையில் அமைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை தூக்கி சாப்பிட்டது.
இப்படம் வெளியான சமயத்தில் யார் இந்த பிரபாஸ்..? என அனைவரும் தேட ஆரம்பித்த போதுதான் தெரிந்தது இவர் தெலுங்கு பட தயாரிப்பாளர் சூர்ய நாராயண ராஜூவின் மகன் என்று.
2002 ஆம் ஆண்டில் தன் சினிமா பயணத்தை தொடங்கி பல தெலுங்கு படங்களில் நடித்த தகவலும் தெரிய வந்தது.
அதன் பின் வெளியான சாஹோ படமும் ராதே ஷ்யாம் படமும் ப்ளாப் ஆனது. பெரும் பொருட் செலவில் உருவாகி சில நாட்களுக்கு முன் வெளியாகி மோசமான விமர்சனங்களை சந்தித்த ஆதிபுருஷ் படமும் வசூல் ரீதியாக அடிவாங்கியது.
தற்போது இவர் பிரசாந்த் நீலின் சலார் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர், இப்படத்தின் டீசர் ஜூலை 6 ஆம் தேதியன்று காலை 5:12 மணி அளவில் வெளியாகும் என்ற அதிகாரபூர்வ தகவல் வந்தது.
தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் பிரபாஸிற்கு பிரசாந்த் நீலின் சலார் கைக்கொடுக்கலாம். அதுமட்டுமில்லாமல் கே.ஜி.எஃப் 1 மற்றும் 2, காந்தாரா ஆகிய வெற்றி படங்களை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் இப்படத்தின் கதையை நம்பி தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் இதன் மீது பெரும் எதிர்ப்பார்ப்பும் உள்ளது.