Chandramukhi 2 : பரபரப்பாக நடக்கும் சந்திரமுகி 2 டப்பிங் பணிகள்..லாரன்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட லைகா நிறுவனம்!
19 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தார, பிரபு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை பி.சிவா இயக்கினார். இது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் வாசுவே, நடன இயக்குநரும் மற்றும் நடிகருமான ராகவா லாரன்ஸை வைத்து சந்திரமுகி 2 எடுத்துள்ளார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவர் தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது பெற்ற கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்
தற்போது சந்திரமுகி 2 படத்தின் டப்பிங் தொடங்கியுள்ளது. லாரன்ஸ் டப்பிங் செய்யும் புகைப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.