Saamaniyan Movie Review : கம் பேக் கொடுத்த ராமராஜன்..சாமானியன் படம் எப்படி இருக்கிறது?
12 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள படம் சாமானியன். இந்த படத்தை ஆர்.ராகேஷ் இயக்கியுள்ளார்.
ராமராஜன் வங்கிக்கு ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுடன் சென்று அங்குள்ளவர்களை பணயக்கைதியாக பிடித்துக் கொள்கிறார். ராமராஜனுக்கும் வங்கிக்கும் என்ன பிரச்சினை? வங்கிக்கு உள்ளே சிக்கிக் கொண்டவர்கள் கதி என்ன? என்பதே படத்தின் கதை.
படத்தில் நடிகர்களின் தேர்வு சிறப்பாக இருந்தது. ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர், கே எஸ் ரவி குமார், மைம் கோபி அவர்கள் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
ராமராஜனுடன், ராதாராவி, எம்.எஸ்.பாஸ்கர் இணைந்து தங்கள் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இளையராஜாவின் இசை படத்திற்கு மற்றொரு பலம் என்று கூறலாம். படத்தின் காட்சிக்கு ஏற்றது போல இசை நகர்த்தி சென்றது.
இந்த படம் ராமராஜனுக்கு ஒரு கம்-பேக் படமாக அமைந்தது. படத்தில் பெரிதளவு காமெடி காட்சிகள் இடம் பெறவில்லை. ஆரம்பத்தில் வரும் காமெடியும் சிரிப்பு வரும் அளவிற்கு வரவில்லை.
சாமானியன் படம் சாமானிய மக்கள் பிரச்சினையை எடுத்துப் பேசியுள்ளதால் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.