Karthi 27 : 96 பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி!
அனுஷ் ச | 24 May 2024 01:13 PM (IST)
1
தமிழ் சினிமாவில் ஹிட் படங்கள் கொடுத்து வரும் நடிகர்களில் கார்த்தியும் ஒருவர். கார்த்தியின் 27 படத்தை 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கவுள்ளார்.
2
இந்த படத்தை 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சூர்யா- ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் மூன்றாவது படம் இது.
3
இந்த படத்தில் அரவிந்தசாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
4
96 படத்தில் இசையமைத்த கோவிந்த் வசந்தா உடன் மீண்டும் கைகோர்க்கிறார் பிரேம் குமார்.
5
கடைக்குட்டி சிங்கம் படத்தில் சூர்யா கேமியோவாக ஒரு காட்சியில் நடித்திருப்பார். இந்த படத்திலும் சூர்யா கேமியோவாக வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
6
நாளை கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது.