SPB 78th Birthday : தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..எஸ் பிபியின் பிறந்தநாள் இன்று!
1966 ஆம் ஆண்டு எஸ்.பி.கோதண்டபாணி இசையமைத்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா என்ற தெலுங்கு படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரே நாளில் 21 கன்னட பாடல்களை பாடி ரெகார்ட் செய்துள்ள பெருமை எஸ் பி பியையே சேரும். அது மட்டுமல்லாமல் ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களையும், 16 ஹிந்தி பாடல்களையும் பாடியுள்ளர்.
இவர் தனது வாழ்நாளில் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என 16 மொழிகளில் 40000-க்கும் மேற்பட்ட சிறந்த பாடல்களை பாடியுள்ளார்.
6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது, 2001 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது, 2021 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு வெளிவந்த அண்ணாத்தே படத்தில் வரும் அண்ணாத்தே அண்ணாத்தே என்ற பாடலை இவர் கடைசியாக பாடினார். இந்த படம் வெளியாகும் முன்னரே எஸ் பி பி காலமானார்.
எஸ் பி பி மறைந்தாலும் அவர் பாடல் மூலம் இன்றைக்கும் நம்முடன் வாழ்த்துக் கொண்டிருக்கிறார். ஜூன் 4 ஆம் தேதி பிறந்த எஸ் பி பாலசுப்ரமணியத்தை பலரும் போற்றி வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -