Lok Sabha Election 2024 : மக்களவை தொகுதியில் களம் கண்ட நட்சத்திர வேட்பாளர்கள்!
நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டார். இவருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியை சார்ந்த அருள் மொழி தேவனும் காங்கிரஸை சார்ந்த மாணிக்கம் தாகூரும் தேமுதிகவை சார்ந்த விஜய பிரபாகரனும் போட்டியிட்டுள்ளனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமலையாள நடிகர் சுரேஷ் கோபி, கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சுனில் குமாரும் காங்கிரஸை சார்ந்த கே முரளிதரனும் போட்டியிட்டுள்ளனர்.
நடிகர் பவான் கல்யாண் ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தபுரம் தொகுதியில் ஜனசேனா கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார். இவருக்கு எதிராக பகுஜன் சமாஜ்வாடியை சார்ந்த ஈட்டி ஜகதீஷ், காங்கிரஸை சார்ந்த மடப்பள்ளி சத்தியானந்த ராவ் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
நடிகை கங்கனா ரனாவத் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மந்தி தொகுதியில் பாஜக சார்பாக, காங்கரஸை சேர்ந்த விக்ரமாதித்ய சிங்கிற்கு எதிராக போட்டியிட்டார்.
லாக்கர் சாட்டர்ஜி பாஜக சார்பாகவும், ரச்சனா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் சார்பாகவும் மேற்கு வங்காளத்தின் ஹூக்லி தொகுதியில் போட்டியிட்டுள்ளனர்.
வங்காள மொழி சினிமாவை சார்ந்த தேவ் அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் சார்பாகவும், ஹிரான் சாட்டர்ஜி பாஜக சார்பாகவும் போட்டியிட்டுள்ளனர்.
நடிகர் சத்ரூகன் சின்ஹா மேற்கு வங்காளத்தின் அசனோல் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டார். இவருக்கு எதிராக நடிகர்-பாடகருமான பவன் சிங் சுயேட்சையாக போட்டியிட்டார்.
பாடகர் மற்றும் நடிகருமான மனோஜ் திவாரி வட கிழக்கு டெல்லி தொகுயில் பாஜக சார்பாக காங்கரஸை சார்ந்த கணாயா குமாருக்கு எதிராக போட்டியிட்டார்.
உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக சார்பாக ஹேமா மாலினி போட்டியிட்டார். இதே தொகுதியில் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். இந்தாண்டு காங்கிரஸின் முகேஷ் தாங்கர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சுரேஷ் சிங்கை எதிர்த்து களம் கண்டுள்ளார்.
ராமாயணம் நாடகத்தில் ராமராக நடித்த அருண் கோவில் உத்திர பிரதேசத்தின் மீரத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டார். பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த தேவ்ரத் குமார் தியாகியும் சமஜ்வாடி கட்சியை சார்ந்த சுனிதா வர்மாவும் இவருக்கு எதிராக போட்டியிட்டுள்ளனர்.
போஜ்புரி நடிகர் ரவி கிஷான் பாஜக சார்பாக உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் போட்டியிட்டார். சமஜ்வாடி கட்சியை சார்ந்த காஜல் நிஷாத், பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த ஜாவத் அஷ்ரஃப் ஆகியோருக்கு எதிராக இவர் போட்டியிட்டுள்ளார்.
மற்றொரு போஜ்புரி நடிகரான தினேஷ் லால் யாதவ், உத்திர பிரதேசத்தின் அசம்கார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். சமஜ்வாடி கட்சி, இவருக்கு எதிராக தர்மேந்திர யாதவை களமிறக்கியது.
திரிணாமுல் காங்கிரஸை சார்ந்த ஜூன் மாலியா மேற்கு வங்காளத்தின் மெதினிபூரில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக பாஜகவை சார்ந்த அக்னிமுத்ரா பால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பிப்லப் பாட்டா, காங்கிரஸை சார்ந்த சம்புநாத் சாட்டோபாத்யா ஆகியோர் போட்டியிட்டனர்.
நடிகை சத்தாபதி ராய் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக மேற்கு வங்காளத்தின் பிர்பம் தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக பாஜகவின் தேபாசிஸ் தர் மற்றும் காங்கிரஸை சார்ந்த மில்டன் ரஷித் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
நடிகை நவநீத் ராணா மகாராஷ்டிராவின் அம்ராவதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார். இவருக்கு எதிராக காங்கிரஸை சார்ந்த பல்வந்த் வாங்கடே, பகுஜன் சமஜ்வாடி கட்சியை சார்ந்த சஞ்சய் குமார் காட்கே ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -