S J Suryah : எஸ் ஜே சூர்யாவின் வெறித்தனமான லைன் அப்ஸ்.. அப்போ சம்பவம் இருக்கு!
தனுஷின் 50 - வது படமான ராயன் படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா படத்தில் முன்னணி நடிகராக நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் இந்தியன் 2 . இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்தியன் 2 ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் தற்போது நடித்து வரும் படம் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் 20 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கி வரும் படம் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு முன்னணி நடிகர்களாக நடித்து வருகின்றனர்.
நானி நடித்து வரும் சரிபோதா சனிவாரம் என்ற தெலுங்கு படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கி வருகிறார். படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது.
ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படம் கேம் சேஞ்சர். இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக ஷங்கருடன் இணைகிறார் எஸ் ஜே சூர்யா.