HBD Revathi : அவர் நடிகை மட்டுமல்ல.. அதற்கும் மேல.. ரேவதியை பற்றி நீங்கள் அறியாத தகவல்கள் இங்கே!
நடிகை, நடன கலைஞர், இயக்குநர், டப்பிங் கலைஞர் என சினிமாவில் கலக்கி வரும் ரேவதியின் ரியல் பெயர் ஆஷா கெலுன்னி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதனது 17 வயதில் பாரதி ராஜாவின் மண் வாசனை என்ற படத்தில் பாண்டியனுக்கு ஜோடியாக முத்துப்பேச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
1992 ஆம் ஆண்டு ‘தேவர் மகன்’ படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.இவர் இயக்கத்தில் உருவாகிய மித்ர் மை ஃப்ரண்ட் என்ற படம் சிறந்த ஆங்கில படத்திற்கான பிரிவில் தேசிய விருதை வென்றது.
2011 ஆம் ஆண்டில், இவர் இயக்கிய ‘ரெட் பில்டிங் வேர் தி சன் செட்ஸ்’ சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை பெற்றது.
ஃபிர் மிலேங்கி, மும்பை கட்டிங், சலாம் வெங்கி போன்ற ஹிந்தி படங்களையும் கேரளா கஃபே என்ற மலையாள படத்தையும் இயக்கிவுள்ளார்.
மின்சாரா கனவு படத்தில் கஜோலுக்கும், கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தில் தபுவிற்கும் டப்பிங் செய்தவர் இவர்தான்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -