Andrea Jeremiah Photos : என் உயிராடுற என்னடி மாயாவி நீ.. சேலையில் அசத்தும் ஆண்ட்ரியா!
பின்னணி பாடகி மற்றும் நடிகையுமான ஆண்ட்ரியாவின் குரலுக்கும் நடிப்புக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.
கண்ணும் கண்ணும் நோக்கியாவில் தொடங்கி ஓ சொல்றியா வரை பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்
வேட்டையாடு விளையாடு படத்தில் கமலினி முகர்ஜிக்கும், ஆடுகளம் படத்தில் டாப்சிக்கும், நண்பன் படத்தில் இலியானாவிற்கும், தங்க மகன் படத்தில் ஏமி ஜாக்சனிற்கும், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் தமிழ் வெர்ஷனில் ஸ்கார்லெட் ஜோஹான்சனிற்கும் டப்பிங் கொடுத்துள்ளார்.
இப்போதெல்லாம் உலகெங்கும் நடக்கும் தமிழ் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அத்துடன் அவ்வப்போது டூர் சென்று வருகிறார்
இந்நிலையில் காட்டன் சேலை அணிந்து போட்டோ எடுத்து, அதை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.