Rathna Kumar : லியோ விழாவில் சர்ச்சை பேச்சு..வெச்சு செய்த ரஜினி ரசிகர்கள்!
இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்ன குமார். அதனை தொடர்ந்து அமலா பாலை வைத்து ஆடை, சந்தானத்தை வைத்து குலு குலு ஆகிய படங்களை இயக்கினார்.
லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரான இவர் மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
லியோ படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதல் எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு அப்படத்திற்கான ஹைப்பை ஏற்றி வந்தார்.
நேற்று நடந்த லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் வந்தவுடன் அரங்கமே அதிரியது. அப்போது ரத்னா குமாரின் வாட்ச் அலர்ட் கொடுத்தது. அதனை புகைப்படம் எடுத்து, “அந்த சத்தம்..” என இன்ஸ்டாவில் ஸ்டோரியை பகிர்ந்து இருந்தார்.
மேடையில் ஏறிய பின், “எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆக வேண்டும்.” என்று சர்ச்சையாக பேசினார். இதனால் ரஜினி ரசிகர்கள் பலர் கோபம் அடைந்து, ரத்ன குமாரை திட்டி வருகின்றனர்.
இந்நிலையில், “நான் ஆஃப்லைன் செல்கிறேன். அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும் வரை சோஷியல் மீடியாவில் இருந்து சற்று ப்ரேக் எடுக்கவுள்ளேன். கூடிய விரைவில் சந்திப்போம்..”என இன்று காலையில் பதிவிட்டுள்ளார் ரத்ன குமார்.