Trisha Saree Photos : சிவப்பு சேலையில் ரோஜா போல் மிளிரும் நடிகை திரிஷா!
நேற்று (01.11.2023) நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லியோ படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். விஜய்க்கு ஜோடியாக நடித்த திரிஷாவும் வருகை தந்திருந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநேற்று சிவப்பு நிற பார்ட்டி டிசைனர் சேலையை அணிந்திருந்தார். சேலை நிறத்திலேயே ப்ளவுஸ் உடுத்திய திரிஷா, புதிதாய் பூத்த ரோஜா மொட்டு போல் இருந்தார்.
வைரம் போன்ற கற்களால் செய்யப்பட்ட நெக்லஸ், கம்மல், மோதிரம் ஆகியவற்றை அணிந்திருந்தார்.
இந்த ஆடைக்கு ஏற்றவாறு லைட் மேக் அப்பை தேர்ந்தெடுத்துள்ளார். கண்களில் கவனம் செலுத்தி உதடுகளுக்கு நியூட் கலர் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தியுள்ளார். இந்த லுக்கிற்கு அழகு சேர்க்கும் வகையில் சிவப்பு நிற பொட்டு அமைந்துள்ளது.
திரிஷாவின் இந்த லுக், நேற்றே சமூக வலைதளங்களில் வெளியானது. தற்போது திரிஷாவே அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
தேவதை போல் இருக்கும் திரிஷாவின் இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -