Car Maintenance : உங்கள் காரின் ஆயுட்காலத்தை நீட்டிக்க இதையெல்லாம் செய்யுங்க!
காரில் முதலில் கவனிக்க வேண்டியது இன்ஜின் ஆயில். 7000 கிமீ பயணம் செய்த பின்னர், ஆயிலை மாற்ற வேண்டும். இதை ஒவ்வொரு 7000 கிமீ பயணத்திற்கு பின் செய்ய வேண்டும். ஆயில் மாற்றும் போது ஆயில் பில்டரையும் ( Filter ) சேர்த்து மாற்ற வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App40000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை ஏர் பில்டரை மாற்றலாம். மாசு நிறைந்த இடத்தில் பயணம் செய்யும் போது அடிக்கடி ஏர் பில்டரை மாற்ற வேண்டும்
கார் வாங்கி 150000 கிலோ மீட்டர் வரை கார் ஓட்டலாம். பின் க்ளட்ச் ப்ளேட்டை மாற்ற வேண்டும். பிறகு 80000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை அதை மாற்றுவது அவசியம். இது கார் எந்த இடத்தில் ஓட்டுகிறோம் என்பதை பொறுத்து மாறுபடும்.
பலரும் காரின் டயர் பராமரிப்பு பற்றி அறிவதில்லை. ஒவ்வொரு 7000 கிமீ முதல் 10000 கிமீ வரை டயரை கிராஸ் சேஞ்ச் ( cross change ) செய்ய வேண்டும். முன் இருக்கும் டயரை பின்னாலும் , பின் இருக்கும் டயரை முன்னாலும் மாற்றுவது தான் கிராஸ் சேஞ்ச்
டயர் பராமரிப்பில் அடுத்து பார்க்க வேண்டியது வீல் அலைன்மெண்ட் (wheel alignment) ஒவ்வொரு 10000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை இதை மாற்ற வேண்டும்.
பிரேக் ஆயில் மற்றும் கிளட்ச் ஆயில் போன்றவற்றை 80000 கிலோ மீட்டருக்கு ஒரு மறை கட்டாயம் மாற்ற வேண்டும். இவை அனைத்தையும் முறையாக பராமரித்தால், உங்கள் காரின் ஆயுட்காலம் நீடிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -