Deepika Padukone: தீபிகா படுகோனே உடனான ஃபர்ஸ்ட் நைட் ரகசியங்களை பப்லிக்காக பேசி ஷாக் கொடுத்த ரன்வீர் சிங்!
கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். Bachna Ae Haseeno என்ற படம் மூலமாக இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்க தொடங்கினர். இதையடுத்து ரன்வீர் சிங்கின் பெயரை டாட்டூவாக போடும் அளவிற்கு இருவரும் நெருங்கி பழகினர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் பிரித்ததாக கூறப்பட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபின்னர், 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ராம் லீலா படம் மூலமாக இருவரும் மீண்டும் சந்தித்து, பிரிந்த காதலை மீண்டும் புதுப்பித்து கொண்டனர். இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆம், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மிகவும் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் 200 பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், ஒரு சில முக்கிய பாலிவுட் பிரபலங்கள் தான் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த தீபிகா படுகோன், திருமணம் ஆகி 6 வருடங்கள் கழித்து, அழகான பெண் குழந்தையை கடந்த ஆண்டு பெற்றெடுத்தார். தங்களின் குழந்தைக்கு ரன்வீர் மற்றும் தீபிகா படுகோன் ஜோடி துவா படுகோன் சிங் என பெயரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் சிங், முதல் இரவு குறித்த ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். கரண் ஜோகர்.. திருமண சங்குகள் உங்களை சோர்வடைய செய்ததா? என கேட்டதற்கு, இல்லை என வேகமாக தலையாட்டிய ரன்வீர், முதலிரவில் நானும் தீபிகாவும் நெருக்கமாக இருந்தபோது சோர்வாக இருந்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அந்த சோர்வை போக்க சில உணர்ச்சிகளை தூண்டும் பாடல்களை கேட்டதாக, ரன்வீர் வெளிப்படையாக பேசி கரணுக்கு ஷாக் கொடுத்து விட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -