ஹனி மூன் கொண்டாட போன கீர்த்தி சுரேஷுக்கு இப்படி ஆகிடுச்சே? அவரே வெளியிட்ட போட்டோஸ்!
15 வருட காதலுக்கு பிறகு காதல் திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ் இப்போது கணவருடன் தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய கால இடைவெளியிலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றவர்.
ரஜினிகாந்த், விஜய், சூர்யா என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக பேபி ஜான் படம் மூலமாக ஹாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் பெரியளவில் ஹிட் கொடுக்கவில்லை.
எதிர்பார்த்ததைவிட இந்தப் படத்தின் மூலமாக ஏமாற்றமே மிஞ்சியது. இயக்குநர் காலீஷ் இயக்கத்தில் அட்லீ தயாரிப்பில் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்காக இந்தப் படம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்தது.
ரூ.160 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ் மற்றும் வருண் தவானின் பேபி ஜானுக்கு ரூ.53.40 கோடி மட்டுமே வசூல் கிடைத்தது.
இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் கழுத்தில் தாலியுடன் வலம் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
15 வருடங்களாக காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை தான் கீர்த்தி சுரேஷ் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்ச்சியில் விஜய், த்ரிஷா ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் இருவரும் பள்ளி பருவம் முதலே நட்பாக பழகி வந்த நிலையில் இருவரும் காதலை பரிமாறிக் கொண்டு இப்போது இல்லற வாழ்வில் இணைந்துள்ளனர்.
2010 ஆம் ஆண்டு ஆண்டனி தட்டில் தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். பின்னர் 2016 ஆம் ஆண்டு காதலை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது கீர்த்தி சுரேஷிற்கு தங்க மோதிரத்தை பரிசாக கொடுத்துள்ளார்.
இப்படி இருவரும் மாறி மாறி தங்களது வளர்த்து வந்த நிலையில் இப்போது திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு பேபி ஜான் பட புரோமோஷனில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு கணவருடன் இணைந்து ஹனிமூனுக்கு சென்றுள்ளார்.
தாய்லாந்தில் உள்ள ஃபூகெட் தீவில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை கீர்த்தி சுரேஷ் சற்று முன் தான் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை இருவரும் ஒன்றாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். படகு சவாரி, இளநீர் அருந்துவது, ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக் ரைடு, சாப்பாடு, டின்னர், பீச், இரவு தூக்கம் என்று வெரைட்டி வெரைட்டியாக எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் பதிவிட்ட கடைசி புகைப்படத்தை பார்க்கும் போது அவர் பல இடங்களுக்கு சென்று வந்ததால் பீவர் வந்திருக்கும் என்று தெரிகிறது. இதற்கு ரசிகர்கள் ஹேப்பி மேரேஜ் லைஃப், அழகான இடங்கள், அச்சோ பாவம் சீக்கிரமாக குணமடைந்து வாருங்கள் என்று பலவிதமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.