HBP Ram Pothineni : ‘கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு..’ டாலிவுட் நாயகன் ராம் பொதினேனிக்கு பிறந்தநாள்
வளர்ந்து வரும் தெலுங்கு திரையுலகின் நட்சத்திரங்களுள் ராம் பொதினேனியும் ஒருவர். அவரின் வசீகரிக்கும் நடிப்பும், ஒப்பில்லாத திறமையும் மில்லியன் கணக்கான ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appராமின் தந்தை முரளி பொதினேனி, பிரபலமான தெலுங்கு தயாரிப்பாளர்களில் ஒருவர்.
ராம் பொதினேனி 2006 ஆம் ஆண்டு 'தேவதாசு' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இலியானாவுடன் ஜோடியாக நடித்த இவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானது.
தி வாரியர் படத்தில், சிம்புவின் குரலில் தமிழிலும் தெலுங்கிலும் வெளிவந்த புல்லட் பாடல், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவை தாண்டி, வட இந்தியாவிலும் ரீல்ஸ் மூலம் வைரலானது.
புல்லட் பாடலில், சிம்புவின் குரல் ஒரு பக்கம் ஒளிக்க, ராம் மற்றும் க்ரித்தி ஷெட்டியின் அசால்ட் நடனம், அப்பாடலின் ஹைலைட்டாக அமைந்தது. தற்போது வரை 79 மில்லயன் பார்வைகளை கடந்துள்ளது.
இன்று பிறந்தநாள் காணும் புல்லட் நாயகன் ராமிற்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -