HBD SaNa : ‘காதல் கப்பல் ஏறி இனி போவோமா..’ சனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வரும் ரசிகர்கள்!
ரெக்கார்டிங் இன்ஜினியராக தன் வாழ்க்கையை தொடங்கிய இவர், 2012 ஆம் ஆண்டில் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஜய் சேதுபதி நடித்த 'பீட்சா' படத்தின் திகிலான பின்னணி இசை பலரையும் பபயமுறுத்தியது. இதன் பின் வந்த 'குக்கூ' படத்தின் மொத்த ஆல்பமும் பெரிய ஹிட் ஆனது.
ஜிகிர்தண்டா படத்தில் இடம்பெற்ற பாண்டி நாட்டின் கொடியின் மேல பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டானது. அதன் பின், மெட்ராஸ், இறுதிச்சுற்று, காதலும் கடந்து போகும், இறைவி, கபாலி, கொடி, மேயாத மான், காலா, பரியேறும் பெருமாள், வடசென்னை, ஜகமே தந்திரம், சார்பட்ட பரம்பரை என தொடர் ஹிட்களை கொடுத்தார்.
ஸ்பைடர் படத்தில் வரும் எஸ்.ஜே.சூரியாவை போல், சந்தோஷ் நாராயணனின் இசையை கேட்க தொடங்கிய மக்கள், பா.ரஞ்சித் கொடுத்த சனா என்ற அடையாளத்தை ஆரத்தழுவினர்.
இசையமைப்பாளராவதற்கு முன், ஆல்பம் பாடல்களை இசையமைத்து வந்த சந்தோஷ் நாராயணன், இன்று இருக்கும் சோலோ இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து வழிகாட்டி வருகிறார்.
பிறந்தநாளை கொண்டாடும் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -