Youtuber Irfan Marriage : மெஹந்தி முதல் கல்யாணம் வரை.. போட்டோ மழையில் ஜமாய்த்து வரும் இர்ஃபான்!
தமிழ்நாட்டில் ஃபுட் ரிவ்யூவிற்கு பிள்ளையார் சுழி போட்ட இர்ஃபான் நாளடைவில் மற்ற மாநிலங்களுக்கும், துபாய், துருக்கி, இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று உணவு விமர்சனம் செய்து வந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசில ஆண்டுகளுக்கு முன் இர்ஃபானின் திருமணம் நிச்சயம் வரை சென்று ஒரு சில காரணங்களால் நின்றுபோனது. இப்போது, இர்ஃபானுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் நடந்தது
கடந்த சில நாட்களில், ஊரெல்லாம் சென்று பத்திரிக்கை வைத்த இர்ஃபான் கமல்ஹாசன், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழை கொடுத்தார்.
நண்பர்கள், உறவினர்கள் சூழ கோலகலமாக ஹல்தி விழா நடந்தது. திருமண மண்டபத்திற்கு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை முதற்கொண்டு அடுத்தடுத்த அப்டேட்டை கொடுத்து வந்தார் இர்ஃபான்.
இந்த பதிவுகளின் கீழ் வாழ்த்துக்களை தெரிவித்த மக்கள், “அண்ணியின் புகைப்படத்தை ஷேர் செய்யுங்க அண்ணா.” என கமெண்ட் செய்தனர்.
அதற்கேற்றவாரு, திருமண மேடையில், அவர் மனைவியுடன் புகைப்படத்தையும், திருமணத்திற்கு பின் வீட்டில் குடும்பத்தாருடன் இருக்கும் போட்டோவையும் எடுத்து பதிவிட்டுள்ளார் இர்ஃபான்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -