HBD Ram Charan : ஸ்வாமி தரிசனம். பாடல் ரிலீஸ்... ராம் சரண் பர்த்டே கொண்டாட்டம்!
லாவண்யா யுவராஜ் | 27 Mar 2024 05:00 PM (IST)
1
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் முன்னணி நடிகருமான ராம் சரண் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமாகிவிட்டார்.
3
தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார்.
4
ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு 'கேம் சேஞ்சர்' படத்தின் 'ஜரகண்டி' பாடலை படக்குழு வெளியிட்டள்ளது.
5
இப்படத்தில் ராம் சரண் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
6
பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
7
'கேம் சேஞ்சர்' படத்தை தொடர்ந்து புச்சி பாபு இயக்கத்தில் ஆர்.சி 16 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்க உள்ளார்.