Lal Salaam Wrapped: நிறைவடைந்தது லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு..கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்து வந்த திரைப்படம் லால் சலாம்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் - விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய படமாக உருவாகி வருகிறது லால் சலாம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
லால் சலாம்' படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் என்னவென்றால் இந்தப் படத்தில் ’மொய்தீன் பாய்’ என்னும் கேரக்டரில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே பாட்ஷா பாயாக நடித்த ரஜினி, இந்தப் படத்தில் மொய்தீன் பாயாக மீண்டும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் தோன்றுவதைப் பார்க்க அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
லால் சலாம் படத்தின் ஷூட்டிங் திருவண்ணாமலை, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இப்படியான நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகள் முன்னதாக ஏற்கெனவே நிறைவைடைந்தன. இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.
ரஜினியின் காட்சிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து படக்குழுவுடன் சேர்ந்து ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் விஷ்ணு விஷால், மிக நீண்ட பதிவு ஒன்றை சேர்த்து பதிவிட்டிருந்தார்.
தற்போது லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும் படக்குழு இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ள நிலையில், இணையத்தி இந்தப் புகைப்படங்கள் லைக்ஸ் அள்ளி வருகின்றன.