Jailer Celebrations: ‘அலப்பற கெளப்புறோம் தலைவரு நிரந்தரம்..’ எங்கும் ஜெயிலர் மயம்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நாளை (ஆகஸ்ட் 10) வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷனும் விறுவிறுப்பாக நடந்த நிலையில் முன்னதாக பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய சாதனை படைத்த ஜெயிலர் படத்தை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் பெரும் எதிர்பார்ப்புடன் காண ஆவலாக காத்திருக்கிறது.
மேலும் இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிர்கர்கள் தீவிரமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேனர் அடிப்பது, பட்டாசு வெடிப்பது, பால் அபிஷேகம் செய்வது என தங்கள் அன்பை பொழிந்து வருகின்றனர்.
கூடுதலாக ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களிலும் ஜெயிலர் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் ஜெயிலர் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் ரஜினியை புகழ்ந்தும் நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -