10 Years of Thalaivaa : விஜய்யின் தலைவா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு!
இந்த படத்தில் அமலா பால், சத்யராஜ், சந்தானம், நாசர், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இப்படத்தின் கதைகளம் : மும்பை தமிழர்களுக்கு அரணாக இருக்கும் தந்தை மறைவுக்கு பிறகு நடிகர் விஜய்யை தலைவராக மும்பை மக்கள் ஏற்கின்றனர். இதை பொறுத்து கொள்ள முடியாத வில்லன், கதாநாயகனை கொல்ல நினைக்கின்றான். மற்றொரு பக்கம், தான் விரும்பிய காதலியின் சுயரூபம், விஜய்க்கு ஏமாற்றத்தையும் தருகிறது. இதற்கு பிறகு நடப்பது படத்தின் மீதக்கதை.
ரிலீசுக்கு சில நாட்கள் முன்பே தலைவா படம் பல சர்ச்சைகளை சந்தித்தது.‘டைம் டூ லீட்’என்ற இப்படத்தின் டைட்டில் கேப்ஷனால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியதாக தகவல் வெளியானது.
பின், திட்டமிட்டபடி தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தலைவா படம் வெளியானது. இங்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதிதான் வெளியானது.
அதற்குள் பிற மாநிலங்களில் படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் பரவ தொடங்கியதால் இப்படம் தோல்வியை சந்தித்தது.
. இதனைத் தொடர்ந்து வெளியான பெரும்பாலான விஜய் படங்கள் பெரும் பிரச்சினைகளுக்குப் பிறகே ரிலீசாகின. இது அவரது ரசிகர்களுக்கும் பழகிப்போன ஒன்றாகவே மாறிவிட்டது என்பதே நிதர்சனம்.