Jailer : ரஜினியின் ஜெயிலருடன் மோதும் சிவாவின் மாவீரன்..உற்சாகத்தில் ரசிகர்கள்!
அண்ணாத்த படத்தையடுத்து, கோலமாவு கோகிலா, டான் , பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சனுடன் கைக்கோர்த்தார் ரஜினி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபீஸ்ட் நெகட்டிவான விமர்சனத்தை பெற்றதால், ஜெயிலர் படம் கைவிடப்பட்டது என்ற பல தகவல்கள் பரவியது. அந்த தகவலை மறுக்கும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஷாக்கி ஷெராஃப் என பல மொழி உச்ச நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், ரெடின் கிங்ஸ்லி எனப் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினி, ஜெயிலர் கெட்டப்பில் இருக்கும் அசத்தலான புகைப்படங்கள் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
தற்போது, ரஜினியின் ஜெயிலர் படம் வருகிற சுதந்திர தினத்தையொட்டி ரிலீஸாகும் என்ற தகவல் வந்துள்ளது. அதுவும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும்.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் சிவாவின் மாவீரன், ஜெயிலர் படத்திற்கு போட்டியாக அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. இதே டைட்டிலில் ரஜினிகாந்த் நடிப்பில் 1986ஆம் ஆண்டு மாவீரன் படம் வெளியானது என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -