Lal Salaam First Single : வெளியானது லால் சலாம் திரைப்படத்தின் பட்டயை கிளப்பும் முதல் பாடல் ‘தேர் திருவிழா’..!
சுபா துரை | 18 Dec 2023 07:13 PM (IST)

தேர் திருவிழா
1
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்னு விஷால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம்.
2
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மொஹைதீன் பாய் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
3
முன்னதாக தீபாவளி அன்று இப்படத்தின் டீசரும் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று லால் சலாமின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
4
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
5
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
6
அதனை தொடர்ந்து இன்று தேர் திருவிழா பாடல் வெளியாகி உள்ளது.
7
ஷங்கர் மகாதேவன் பாடியுள்ள இப்பாடல் முழுக்க முழுக்க கிராமத்து செட்-அப்பில் படமாக்கப்பட்டுள்ளது.