Rajinikanth: மூத்த மகள் படத்துக்கு டப்பிங்.. இளைய மகள்வழி பேரன் காதணி விழா.. அப்பாவாக இணையத்தில் ஹிட் அடித்த ரஜினி!
தனது மகள் சௌந்தர்யாவின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவுக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து கோவை வந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகோவை வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் சொந்த ஊரான கோவை, சூலூரில், இவர்களது குழந்தையின் மொட்டை, காதணி மற்றும் பெயர் சூட்டு விழா நடைபெற்றது.
இந்நிலையில், தனது சம்பந்தி தொழிலதிபர் வணங்காமுடியின் இல்லத்துக்கு சென்ற ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
மேலும் இன்று மாலை ரஜினிகாந்த் தன் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்துக்கு டப்பிங் பேசும் வீடியோ வெளியானது.
“மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு மேல வை, அதுதான் நம்ம நாட்டோட அடையாளம்” எனும் வசனங்களை ரஜினிகாந்த் பேச, ‘டேக் ஓகே பா’ என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரைப் பாராட்டும் வகையில் இந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், லால் சலாம் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -