Biggest Flops of Rajinikanth : அதிகம் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த ரஜினியின் படங்கள்!
சில படங்களின் மீது ஹைப் மேல் ஹைப் குவிந்து வரும். அதுவும் பெரிய நடிகர்களின் படம் குறித்து சின்ன அறிவிப்பு வந்தால் கூட, அதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்தவகையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த ரஜினியின் படங்களை பற்றி பார்க்கலாம்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த ரஜினியின் படங்கள்!
நடிகர் ரஜினியின் கதை, வசனம் மற்றும் தயாரிப்பில் உருவான பாபா திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. அத்துடன், இப்படத்தில் மது அருந்துவது புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்ததால், தமிழகத்தில் சில இடங்களில் பாபா திரைப்படத்தை திரையிடுவதை தடுக்க பாட்டாளி மக்கள் கட்சியினர் தியேட்டரை முற்றுகையிட்டனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பில் உருவான கோச்சடையான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்வியை சந்தித்தது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான லிங்கா திரைப்படம் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை சந்தித்தது.
இந்த வரியையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் தோல்வியை சந்தித்தது.