Thalaivar 171 : குருவுக்கு எதிராக திரும்பிய சிஷ்யன்.. ரஜினிக்கு போட்டியாக களமிறங்கிய ராகவா லாரன்ஸ்!
ட்ரெண்டிங் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளார்.
தற்போது நடிகர் ரஜினி, ஜெய் பீம் திரைப்பட இயக்குநருடன் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கேரளா மற்றும் தமிழக தென் மாவட்டங்களில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிகர் ரஜினி நடிக்கிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
இதற்கான அப்டேட்டை ஏற்கனவே வெளியிட்டிருந்தது தயாரிப்பு நிறுவனம்.இந்நிலையில் ரஜினியின் 171 திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவிவருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருந்தது.தவிர்க்க முடியாத சில சூழல்களால் அது நடக்காமல் போனது.
தற்போது வெளியாகி இருக்கும் இந்த தகவலால் ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.