World Cup 2023 Semi Final: அரையிறுதியை எட்டிய இந்திய அணி.. உலகத்தரம் வாய்ந்த செயல்திறனுடன் ரோஹித் படை முதலிடம்!
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி தனது ஏழாவது ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது.
ரோஹித் தலைமையிலான இந்திய அணி 1996 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் வான்கடே மைதானத்தில் தோற்கடித்தது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி பெற்றார்.
இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.
இந்திய அணி தொடர்ந்து ஏழாவது வெற்றியை பதிவு செய்தது. தற்போது இந்தியா 7 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்றுள்ளது.
நவம்பர் 5ஆம் தேதி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரு அணிகள் மோதும் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.