Pushpa 2 : தள்ளி போன புஷ்பா 2 ரிலீஸ் தேதி... இது தான் காரணமா? வருத்தத்தில் ரசிகர்கள்...
சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள் படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.
2021ம் ஆண்டு வெளியான புஷ்பா : தி ரைஸ் படத்தின் வசூலை காட்டிலும் இப்படம் அதிகம் வசூலிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.
படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் திரை ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.