A L Vijay Movies : ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் படங்கள்!

2010 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா - எமி ஜாக்சன் நடித்து வெளிவந்த படம் மதராசபட்டினம். பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த எமி ஜாக்சனுக்கும் ஆர்யாவுக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்கள் சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பதே படத்தின் கதை. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குநர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2011 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தை ஏ எல் விஜய் இயக்கி இருந்தார். அப்பாவாக விக்ரமும் மகளாக சாரா அர்ஜுனும் நடித்து இருந்தனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிக உருக்கமாக இருக்கும்.

2013 ஆம் ஆண்டு ஏ எல் விஜய், நடிகர் விஜய் இணைந்த படம் தலைவா. ஒரு சாதாரண பையன் அப்பா இறந்த உடன் எப்படி தலைவன் ஆகிறான்? அடுத்தது என்ன ஆனது? என்பதே படத்தின் கதை. படத்தில் சில இடங்களில் அரசியல் பேசி இருப்பார் விஜய்
2014 ஆம் ஆண்டு நாசர் நடிப்பில் வெளிவந்த சைவம் படத்தை இயக்கி இருப்பார் ஏ எல் விஜய். படத்தின் தலைப்பிற்கு ஏற்ப ஒரு குடும்பமே சைவமாக மாறுவதை சிறப்பாக கூறி இருப்பார் இயக்குநர்.
2017 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தை இயக்கி இருந்தார் ஏ எல் விஜய். இந்த படத்தின் முதல் பாதி நகைச்சுவையாகவும் இரண்டாம் பாதி சீரியஸாகவும் இருக்கும். இது ஒரு வித்தியாசமான பேமிலி படமாகும்
2023 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் மிஷன் சாப்டர் 1 . ஏ எல் விஜய் இயக்கிய ஒரு ஆக்ஷன் திரைப்படம் இது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள், அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகள் இடம்பெற்று இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -