இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரை நட்சத்திரங்கள் இவங்கதான்!
அஞ்சலி : வசந்தபாலன் இயக்கத்தில் அங்காடி தெரு படத்தின் மூலம் திரைப் பயணத்தை தொடங்கியவர் நடிகை அஞ்சலி. அதன் பின் தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஜூன் 16 இன்றுடன் 38 அகவையை நிறைவு செய்கிறார்.
பிரியங்கா மோகன் : தெலுங்கு படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இவர் டாக்டர், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர், டான் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜூன் 16 இன்றுடன் 30 வயதை நிறைவு செய்கிறார்.
பவித்திர லட்சுமி, ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின்னர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பலரால் அறியப்பட்டார். ஜூன் 16 இன்றுடன் 30 வது அகவையை நிறைவு செய்கிறார்.
பவானி ஸ்ரீ : பவானி ஸ்ரீ இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமாரின் சகோதரி ஆவார். இவர் 2023 ஆம் நடித்து வெளிவந்த விடுதலை படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார். ஜூன் 16 இன்றுடன் இவர்க்கு 31 வயது நிறைவடைகிறது.
image 5
மிதுன் சக்ரவர்த்தி: மிதுன் சக்ரவர்த்தி பிரபலமான இந்திய சினிமா நடிகர்.இவர் இதுவரை 350 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஜூன் 16 இன்றுடன் 74 அகவையை நிறைவு செய்கிறார்.