Prabhu Deva ARR Combo: ஆறாவது முறையாக கூட்டணி சேரும் பிரபுதேவா - ஏ.ஆர். ரஹ்மான்!
தென்னிந்திய சினிமாவில் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமையாகராக விளங்குபவர் நடிகர் பிரபு தேவா.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரபு தேவா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் GOAT படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.
தற்போது அவர் மனோஜ் என்.எஸ் இயக்கும் படத்தில் கமிட்டாகி உள்ளார்.
இப்படத்தின் யோகி பாபு, அஜூ வர்கீஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
காதலன், லவ் பேர்ட்ஸ், மின்சார கனவு, மிஸ்டர் ரோமியோ, விஐபி என ஐந்து சூப்பர் ஹிட் படங்களில் இணைந்த இந்த காம்போ ஆறாவது முறையாக 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் மூலம் கூட்டணி சேர்கிறார்கள்.
'முக்காபுல்லா...' பாடலில் பிரபுதேவாவின் ட்ரேட்மார்க் ஸ்டில்லுடன் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டராக வெளியாகியுள்ளது.
இது டான்ஸ் சார்ந்த படமாக இருக்குமோ என ரசிகர்கள் யூகிக்கிறார்கள்.