Gayathrie Shankar : நீங்க மட்டும் ரொமான்ஸ் பண்ணலாமா? இனிமேல் ஆல்பம் டீசர் பார்த்த காயத்ரியின் ரியாக்ஷன்!
தமிழ் சினிமாவின் மோசட் வான்டட் இயக்குநர்களில் ஒருவராக விளங்குபவர் லோகேஷ் கனகராஜ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுத்தடுத்த ஹிட் படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தற்போது ஆல்பம் ஒன்றில் முதல்முறையாக நடித்துள்ளார்.
ஸ்ருதி ஹாசன் - லோகேஷ் கனகராஜ் இணைந்து நடித்துள்ள ஆல்பம் பெயர் 'இனிமேல்'.
கமல்ஹாசன் வரிகளை எழுத ஸ்ருதிஹாசன் இசையமைக்க லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இந்த ஆல்பத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த ஆல்பத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஸ்ருதியும் லோகேஷ் கனகராஜும் மிகவும் ரொமான்டிக்காக நடித்துள்ளனர்.
இனிமேல் ஆல்பம் வரும் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த ஆல்பத்துக்கு நடிகை காயத்ரி ரியாக்ட் செய்துள்ளார். இவர் விக்ரம் படத்தின் நடிகர் ஃபகத் பாசில் காதலியாக நடித்திருந்தார்.
உங்க படத்துல ரொமான்ஸ் பண்ண தலையை வெட்டிட்டு... என்ன மா இது? என லோகேஷ் கனகராஜ் ஆல்பத்தை பார்த்து ரியாக்ட் செய்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -