Salaar Movie: வெளியீட்டை தள்ளி வைத்த சலார் படக்குழு..ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
சுபா துரை | 01 Sep 2023 05:32 PM (IST)
1
மாபெரும் வெற்றி படமான கே.ஜி.எஃப் திரைப்படத்தை இயக்கியவர் ப்ரஷாந்த் நீல். இவர் தற்போது பிரபாஸுடன் சலார் படத்திற்காக கைக்கோர்த்துள்ளார்.
2
இப்படத்தில் ப்ரித்வி ராஜ், ஷ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
3
ஆக்ஷன் - த்ரில்லராக உருவாக உள்ள இப்படத்தின் பிரபாஸ் கேங்ஸ்டராக நடிக்கிறார்.
4
சலாரின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் அப்படத்தின் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படாத நிலையில் பிரபாஸுக்கு காலில் அடிப்பட்டு உள்ளது.
5
அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிரபாஸால் படப்பிடிப்பு வர முடியவில்லை என்றும் அதனால் படப்பிடிப்பு முழுதாக முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
6
இதனால் இந்த வருடம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக இருந்த சலாரின் வெளியீடு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.