Kushi Movie Review : காதல் பொங்கும் குஷி படத்தின் குட்டி விமர்சனம் இதோ!
காஷ்மீரில் அரசு வேலை வாய்ப்பு கிடைத்த விப்லவ்(விஜய தேவர்கொண்டா) ஆராத்யாவை (சமந்தா) சந்திக்கிறார். முதல் சந்திப்பிலே காதலில் விழும் கதாநாயகன், தன் காதலுக்காக எதை எதையோ செய்கிறார். பின்னர், கதாநாயகியும் அவர் காதலை ஏற்கிறார். விப்லவ்- ஆராத்யாவின் பெற்றோருடைய நம்பிக்கை எதிர் எதிர் துருவங்களாக இருப்பது திருமணத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது. அதை எதிர்த்து பதிவு திருமணம் செய்து கொள்கின்றனர். திருமண வாழ்க்கை ஆரம்ப காலகட்டத்தில் இனிதாக போனாலும், போகப்போக இவர்களுக்குள் வரும் சண்டை இல்லற வாழ்வை கசப்பாக்குகிறது. இவர்களுக்குள் ஏன் சண்டை வருகிறது? சண்டைக்கு பின், இவர்கள் எப்படி சேர்க்கிறார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதெலுங்கு இயக்குநர் ஷிவா நிர்வானா, தனது நான்காவது படமான குஷியின் கதையை நன்றாகவே கடத்தி சென்று இருக்கிறார் என்று சொல்லலாம். நிறைய காதல், கதைக்கேற்ற இண்டிமேட் காட்சிகள், கொஞ்சம் காமெடி, அங்காங்கு சென்டிமென்ட், தேவைக்கேற்ற இடங்களில் ஆக்ஷன் என அனைத்தும் பார்க்க கோர்வையாக உள்ளது.
ஜய் தேவரகொண்டாவின் படமும் சரி, சமந்தாவின் படமும் சரி சற்று சுமாராகவே இருந்தது. ஆனால், குஷி அப்படி இல்லை. ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவிற்கு இல்லையென்றாலும், இவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி திரையில் பார்க்க அழகாக உள்ளதையும் தாண்டி நாமே காதல் செய்தால் எப்படி இருக்கும் என்று கனெக்ட் செய்து கொள்ள முடிகிறது.
விஜய் தேவரகொண்டாவின் அப்பாவாக நடித்த சச்சின் கெட்டேகர், கதாநாயகனின் அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன், கதாநாயகியின் அப்பாவான முரளி ஷர்மா, பின் லக்ஷ்மி, ரோஹினி, ஜெயராம் உள்ளிட்டோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்
இப்படத்தில் இடம்பெற்றுள்ள என் ரோஜா நீயா, ஆராய்தா ஆகிய பாடல்கள் படம் வெளியாகும் முன்பே ஹிட்டானது. மற்ற பாடல்கள் ஓகே ரகம்தான்.
படத்தின் முதல் பாதி, ஒரு எண்ட் கார்ட் இல்லாமல் நீண்டு கொண்டே போனதால் அங்கு சற்று தொய்வு ஏற்பட்டது. சித்தாந்தத்திற்கும் சாஸ்திரத்திற்கும் வரும் சண்டையை விட, மனித உணர்வுகளே பெரியது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குஷி படத்தை, உங்கள் லவ்வருடனோ அல்லது நண்பர்களுடனோ சென்று கொஞ்சம் ஃபீல் செய்துவிட்டு வரலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -