Shah Rukh Khan : துபாய் நம்ம கோட்டை.. வருடா வருடம் புர்ஜ் கலிஃபாவில் காட்சி தரும் ஷாருக் கான்!
அட்லீயின் முதல் பாலிவுட் திரைப்படமான ஜவான் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதனையொட்டி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டது.
இந்நிகழ்வை நேரில் காண அட்லீ, பிரியா, அனிருத், ஷாருக்கான் உள்ளிடோர் துபாய்க்கு சென்று இருந்தனர்.
படக்குழுவினர் அங்கு உரையாற்றினர்.
துபாயில் வாழும் ஷாருக்கானின் ரசிகர்கள் அங்கு கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
இந்தியாவை தாண்டி, பாகிஸ்தானிலும் மற்ற அரபு நாடுகளிலும் ஷாருக் கானுக்கு ரசிகர்கள் உள்ளனர். அங்கு இருக்கும் ரசிகர்கள் ஷாருக்கின் ஆரம்பகால கட்டத்திலிருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
துபாயில் பல வீடுகளை வாங்கியுள்ள ஷாருக், அந்நாட்டின் சுற்றுலாத்துறையின் விளம்பர தூதர் ஆவார். துபாயின் கோல்டன் வீசாவை பெற்ற ஷாருக்கானின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவர் நடித்த படங்களின் ப்ரோமோஷனிற்கும் புர்ஜ் கலிஃபாவில் ஸ்பெஷல் வாழ்த்து திரையிடப்படும் என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -