Prabhas : கல்கி 2898 AD படத்தில் பிரபாஸ் கேரக்டர் என்ன? படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்..

கல்கி 2898 AD - பிரபாஸ்
பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்தியன் நடிகராக பிரபலமானவர் நடிகர் பிரபாஸ்.
அதன் தொடர்ச்சியாக அவர் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
இருப்பினும் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த 'சலார்' திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றி பெற்றது.
தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 AD' படத்தில் நடித்து வருகிறார்.
தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.
மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அந்த வகையில் நடிகர் பிரபாஸ் 'பைரவா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புதிய போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.