Maanaadu Hindi Remake: மாநாடு திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பாகுபலி நடிகர்..ஆவலில் ரசிகர்கள்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் 2021 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாநாடு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கு நடிகர் ராணா கடந்த 2022 ஆம் ஆண்டில் ரூபாய் 12 கோடிக்கு கைப்பற்றினார்.
இந்நிலையில் இப்படத்தை அவர் தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
மேலும் இப்படத்தையும் வெங்கட் பிரபு இயக்குவார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அவர் விஜய்யின் 68 ஆவது படத்தை இயக்க இருப்பதால் தெலுங்கு இயக்குனரான ப்ரவின் சத்தாரு இப்படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
கூடுதலாக மாநாடு திரைப்படத்தில் சிம்பு நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் அந்த கதாப்பாத்திரத்தில் நடிகர் ராணாவே நடிக்க இருக்கிறாராம், எஸ்.ஜே.சூர்யா கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் ரவி தேஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.
மேலும் ராணா, இப்படத்தை அவரது தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -