PS2 Kochi Tour: தொடங்கியது பொன்னியின் செல்வன் படக்குழுவின் கேரள பயணம்..வைரலானது சோழர்களின் கூல் செல்ஃபி!
யுவஸ்ரீ | 20 Apr 2023 11:32 AM (IST)
1
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதை தொடர்ந்து, அதன் ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
2
சென்னை, கோவை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
3
தொடர்ந்து நான்கு நாட்களாக பறந்து பறந்து ப்ரமோஷன் செய்த நடிகர்கள், நேற்று ஒருநாள் ரெஸ்ட் எடுத்து கொண்டனர்.
4
டெல்லியில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது, படக்குழுவினர் ஒரு கடையில் ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிட்டனர்.
5
இந்த போட்டோக்கள், நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலானது.
6
விக்ரம், ஐஸ்வர்யா மற்றும் சோபிதா ரோட்டில் நின்று சாப்பிட்ட காட்சி.
7
இந்நிலையில், படக்குழுவினர் இன்று கேரளாவின் கொச்சின் நகருக்கு ப்ரமோஷனுக்காக சென்றனர்.
8
அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது.