Passion Studio Production : பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ள படங்களின் பட்டியல்!
பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். இதில் எஸ் ஜே சூர்யா மற்றும் ஃபஹத் ஃபாசில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
சிவகார்த்திகேயன், டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியோடு மீண்டும் இணையுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் அருள்நிதியை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இப்படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தனி ஒருவன் 2 படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி இயக்குநர் பாண்டிராஜுடன் இணைய உள்ளார். இந்த புதிய கூட்டணியின் படத்தை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆர் ஜே பாலாஜி தற்போது இயக்கி, நடிக்க உள்ள படம் மூக்குத்தி அம்மன் 2 . த்ரிஷா கிருஷ்ணன் அம்மனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த படத்தையும் பேஷன் ஸ்டுடியோ தயாரிக்க போவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு மாசாணி அம்மன் என பெயரிடலாம் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கே சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ரிவால்வர் ரீட்டா. படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியது. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.