Paa Ranjith Vs Ajay Gnanamuthu : பா ரஞ்சித்துடன் இரண்டாவது முறையாக போட்டியிடும் அஜய் ஞானமுத்து!
பா ரஞ்சித் இயக்கும் அனைத்து படங்களிலும் அரசியல் கலந்த திரைக்கதையை பார்க்க முடியும்
வித்தியாசமான த்ரில்லர் படங்களை இயக்குவது அஜய் ஞானமுத்துவின் சிறப்பாகும்.
31 ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படமும், பா ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது படமும் ஒரே நாளில் வெளியானது.
இதில் கோப்ரா உளவியல் கலந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாகவும், நட்சத்திரம் நகர்கிறது காதல், இசை, நாடகம் கலந்த படமாகவும் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
மீண்டும் இரண்டு வருடங்களுக்கு பிறகு பா ரஞ்சித் படமும், அஜய் ஞானமுத்து படமும் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளது.
இதில் தங்கலான் வரலாற்று பின்னணியை கொண்ட ஃபேண்டஸி ஆக்ஷன் படமாகவும், டிமான்டி காலனி ஹாரர் த்ரில்லர் படமாகவும் உருவாகி உள்ளது. இதில் எந்த படம் வெல்ல போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்