Jailer Movie : டைகர் கா ஹுக்கும்.. ஒரு வருடத்தை நிறைவு செய்யும் ரஜினி - நெல்சன் சம்பவம்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் ஜெயிலர்.
வில்லன், ரஜினிகாந்த் மகனை பணய கைதியாக கடத்தி வைத்து ரஜினியிடம் ஒரு விலை உயர்ந்த கிரீடத்தை கொள்ளையடித்து வர சொல்கிறார். அந்த கிரீடத்தை ரஜினிகாந்த எவ்வாறு கொள்ளையடிக்கிறார்? எப்படி மகனை காப்பாற்றினார்? என்பதே மீத கதை
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, சுனில், விநாயகன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தை களமிறக்கினார் நெல்சன்
இந்த சம்பவத்தை கொண்டாடும் வகையில் தியேட்டரில் சில்லறையை சிதறவிட்டு, இன்ஸ்டா, வாட்ஸ் அப்பில் ட்ரெயின் விட்டு ரசித்தனர்.
அனிருத் இசையில், காவாலா, ஹுக்கும், ஜுஜுபி ஆகிய பாடல்கள் மாஸாகவும், ரத்தமாரே சென்டிமென்டல் பாடலாகவும் அமைந்தது .
200 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட ஜெயிலர் படம் 650 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது.