Sobhita Naga Chaitanya : நாகர்ஜுனா மகன் மீது காதல் மழை பொழியும் பொன்னியின் செல்வன் நடிகை!
தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் கடந்த ஆகஸ்ட் ஆம் தேதி நிச்சயம் முடிந்தது.
உற்றார் உறவினர் நெருங்கிய நண்பர்கள் சூழ நடந்த இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது
அறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென காதும் காதும் வைத்தது போல் நிச்சயதார்தம் நடந்து முடிந்ததால் ரசிகர்கள் பலர் ஷாகி ஆகினர்
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையின் தோழி வானதியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான சோபிதா, தெலுங்கு, ஹிந்தி, மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நாக சைதன்யாவுடன் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் சோபிதா.
குறுந்தொகையில் இடம்பெறும், “யாயும் ஞாயும் யாரா கியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,யானும் நீயும் எவ்வழி யறிதும்,செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.” இந்த வரிகளை கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்.