HBD Mani Ratnam: க்ளாசிக் சினிமாவின் நாயகன் இயக்குநர் மணிரத்னம் பிறந்தநாள் இன்று!
இந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் மணிரத்னமும் ஒருவர். PAN இந்தியா படங்களை முதல் முதலில் அறிமுகப்படுத்திவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
மணிரத்னம் இயக்கிய படங்கள், அவரை வெற்றியிக் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. குறிப்பாக அஞ்சலி, நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய், உயிரே போன்ற படங்கள் இவருக்கு வெற்றிகளை குவித்தது.
மணிரத்னத்தின் சினிமா ஞானத்தை பாராட்டி 2002 ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி பெருமைப்படுத்தியது.
மணிரத்னம் மேலும் ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். அந்த நிறுவனத்தின் மூலம் இவரின் சொந்த படங்களையும், மற்ற சில படங்களையும் தயாரித்துள்ளார்.
சினிமாவில் இன்றைக்கும் ஜாம்பவானாக திகழும் மணிரத்னம் இன்று தனது 68 பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்