Nivetha Thomas : எப்படி இருந்த நடிகை இப்படியாக இதுதான் காரணம்!
ராஜ ராஜேஸ்வரி, மை டியர் பூதம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து குருவி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா தாமஸ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2013 ஆம் ஆண்டில் வெளியான நவீன சரஸ்வதி சபதத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இருப்பினும் பெரிய நடிகர்களுக்கு தங்கையாகவும் மகளாகவும் நடிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை. விஜய்யின் தங்கையாக ஜில்லாவிலும், கமலின் மகளாக பாபநாசத்திலும், ரஜினியின் மகளாக தர்பாரிலும் நடித்தார்
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் மாற்றி மாற்றி நடித்து வருகிறார். இந்நிலையில் சமீப காலமாக இவர் இன்ஸ்டாவில் பதிவிடும் புகைப்படங்களில் சற்று உடல் எடை கூடி காணப்படுகிறார்.
நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் லுக்கிற்கு பலர் ஆயிரத்து எட்டு காரணத்தை கூறி வருகின்றனர். ஆனால், 35 எனும் தெலுங்கு படத்தில் சரஸ்வதி எனும் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவே உடல் எடையை கூட்டியுள்ளார். 6 ஆம் தேதி அன்று வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பொதுவாக நடிகைகள் படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கட்டுக்குள் வைக்கதான் கடினமாக உடற்பயிற்சி செய்வார்கள். நிவேதாவவோ பட கதாபாத்திரத்திற்கான லுக்கை அடைவதற்கு அர்பணிப்புடன் செயல்பட்டுள்ளார். முன்னதாக அனுஷ்கா, இஞ்சி இடிப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -