Bholaa Shankar : போலா ஷங்கர் இயக்குநரை வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
2015ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் வேதாளம்.இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன், லட்சுமிமேனன் , கோவை சரளா, சூரி, ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் அண்ணன், தங்கை பாசத்தை கூறும் ஆக்ஷன் படமாக அமைந்தது. தமிழகத்தில் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படம் தெலுங்கு மொழியில் ‘போலா ஷங்கர்’என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதில் தெலுங்கு திரைப்பிரபலம் சிரஞ்சீவி நடித்துள்ளார்.
போலா ஷங்கர் படம் வெளியாவதற்கு முன்னர், இயக்குநர் மெஹர் ரமேஷ் வேதாளத்தின் ரீமேக் குறித்து பேசுகையில்,‘அஜித் நடித்த வேதாளம் கிரிஞ் படம்’என கூறினார்.
தற்போது இப்படம் வெளியான பிறகு வேதாளத்தை விட போலா ஷங்கர் பல மடங்கு கிரிஞ்சாக உள்ளது என நெட்டிசன்கள் இணையத்தில் இயக்குநர் மெஹர் ரமேஷை வருத்தெடுத்து வருகின்றனர்.
அதைதொடர்ந்து, போலா ஷங்கர் படம் வசூல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.