Vijay condolence : இயக்குநர் சித்திக் குடும்பத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனுதாபங்களை தெரிவித்த நடிகர் விஜய்!
மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட படங்களை எடுத்தவர் இயக்குநர் சித்திக்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசித்திக் 2001 ஆம் ஆண்டு தமிழில் விஜய், சூர்யா வைத்து ஃப்ரெண்ட்ஸ் என்ற படத்தை இயக்கி விஜய்க்கு மாபெரும் மார்கெட்டை உருவாக்கி கொடுத்தார்.
வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து வந்த விஜய்க்கு மீண்டும் காவலன் படம் மூலம் அவரை நல்ல நிலைக்கு கொண்டுவந்த இயக்குநர் என்ற பெருமைக்கு சொந்தகார் ஆனார்.
உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி, சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் குடும்பத்தினருக்கு பல முக்கிய பிரபலங்கள் நேரில் சென்று இறங்கல் தெரிவித்தனர்.
தற்போது நடிகர் விஜய், தொலைபேசியின் மூலம் சித்திக் குடும்பத்தை தொடர்பு கொண்டு, வெளியூரில் இருந்ததால் இறுதி அஞ்சலிக்கு வர முடியவில்லை என்ற காரணத்தை கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார் என தகவல் வந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -