Roja vs Sunny Leone : முன்னாள் நடிகை ரோஜாவை ட்ரோல் செய்யும் சன்னி லியோன் ஆதரவாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் - அப்படி அவங்க என்ன பேசினாங்க ?
நடிகை சன்னி லியோன் முன்னாள் ஆபாச நடிகையாக ஆவார் ஆனால் தற்போது அனைத்தையும் விட்டு விட்டு இவரது தனித் திறமையால் பாலிவுட்டில் படம் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் குழந்தைகளைத் தத்தெடுப்பது மட்டுமன்றி மக்களுக்கு பல தொண்டு உதவிகளையும் செய்து வருகிறார்.
தற்போது ஆந்திர மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் அங்கு அரசியல் ஆட்டம் சூடு பிடிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் வாராஹி யாத்திரையின் போது ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக தாக்கி பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மந்திரி ரோஜா ”பவன் கல்யான் ஜெகன் மோகனுக்கு அறிவுரை கூறுவது சன்னி லியோன் வேதம் ஒதுவது போல இருக்கிறது” என்றார் ரோஜா.
இதனால் ரோஜாவின் பேச்சை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தும் இனையத்தில் சன்னி லியோனுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.