Dhansu Vs AR Rahman: ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து - இதுக்கும் தனுஷ் தான் காரணமா? - வம்பிழுக்கும் நெட்டிசன்கள்!
சமீபத்தில் நயன்தாரா தனுஷை கண்டபடி திட்டி 3 பக்கத்திற்கு லெட்டர் வெளியிட்டு தனது நெட்பிலிக்ஸ் ஆவணப்பட விளம்பரத்திற்கு ஊறுகாயாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் இதை பத்தி எல்லாம் கவலைப்படாத தனுஷ் எப்போதும் போல் தனது சினிமா வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி அறிவித்ததுமே நெட்டிசன்கள் தனுஷை வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டனர். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுடனான 29 ஆண்டு கால திருமண பந்தத்தை முடித்துக் கொள்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து தமிழ் ரசிகர்கள் வெளியே வருவதற்குள் மீம்ஸ் கிரியேட்டர்கள் தனுஷை வைத்து தங்களுடைய திருவிளையாடலை நடத்த ஆரம்பித்துவிட்டனர்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - சைந்தவி, இசையமைப்பாளர் இமான், நடிகை சமந்தா - நடிகர் நாக சைதன்யா, நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி என திரையுலகில் அடுத்தடுத்து விவாகரத்து தொடர்ந்து வருகிறது. இதில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடியும் தப்பவில்லை. இருப்பினும் முதலில் விவகாரத்து பெற முடிவெடுத்த இந்த ஜோடி, தற்போது சமரசத்துடன் இணைந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதனால் தனுஷின் திருமண வாழ்க்கை தப்பித்துவிட்டது, ஆனால் அவருடன் பழகியவர்களின் திருமண வாழ்க்கை தான் விவகாரத்தில் முடிந்து விடுகிறது என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதி தனுஷின் நண்பர்களாக இருந்தவர்கள் என்பதால் தனுஷ் தான் காரணம் என கலாய்த்த நெட்டிசன்கள், கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றிய பின்னர் தான் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவியை விவாகரத்து செய்து பிரிந்ததாக கூறி ட்ரோல் செய்தனர்.
தற்போது அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் கடைசியாக தனுஷின் ராயன் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இதனால் ஏ.ஆர்.ரகுமான் விவகாரத்திற்கும் தனுஷ் தான் காரணம் என்பது போல் மீம்ஸ் கிரியேட்டர்கள் விதவிதமாக மீம்ஸ் போட்டு, தனுஷை ட்ரோல் செய்து வருகின்றனர்.
கடைசியா அவர் இசையமைச்ச படம் ராயன் அதுனால இதுக்கும் காரணம் தனுஷ்னு ஆரம்பிச்சுராதீங்கயா... என்ற மீம்ஸ் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நெட்டிசன்களின் இந்த வக்கரமான மீம்ஸ்கள் மற்றும் கமெண்டிற்கு தனுஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகிறார்கள். தனுஷின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இதுபோன்ற கேவலமான செயல்களை சிலர் செய்து வருவதாக சகட்டு மேனிக்கு சாடி வருகின்றனர்.