Actress Abhirami : தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாரா நடிகை அபிராமி ?...எதனால் இந்த குழப்பம்
அர்ஜூன் நடித்து 2000 ஆம் ஆண்டு வெளியான வானவில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபிராமி. தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன் , சமுத்திரம் , சார்லி சாப்ளின் , விருமாண்டி உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்தார். சில கால இடைவெளிக்குப் பின் தற்போது மீண்டும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார் அபிராமி. விஜய் சேதுபதி நடித்த மகராஜா மற்றும் சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்திலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அடுத்தபடியாக கமலின் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார்.
நடிகை அபிராமி நேற்று நவம்பர் 19 ஆம் தேதி சென்னையில் பிரபுதேவா நடித்துள்ள ஜாலியோ ஜிம்கானா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது அவர் விஜயின் தமிழ வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி பொருத்தப்பட்ட காரில் வந்து இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறது. முன்னதாக கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் கட்சி மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் ஆளும் திமுக அரசை நேரடியாக விமர்சித்தார். இந்த மாநாட்டில் விஜய் பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறின.
தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பலர் விஜயின் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார். இதில் யார் யார் கட்சியில் சேரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது. தற்போது வரை நடிகர் செளதரபாண்டியன் , தாடி பாலாஜி , ஶ்ரீனி உள்ளிட்டவர்கள் தவெகவில் இணைந்துள்ளார்கள்.
இப்படியான நிலையில் தவெக கொடி பொருத்தப்பட்ட காரில் அபிராமி வந்ததது அவர் அக்கட்சியில் சேர்ந்ததை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இது குறித்து அபிராமி அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால் ரசிகர்களிடம் குழப்பம் நிலவி வருகிறது
image 6